fbpx

வாட்ஸ் அப் பயனர்களுக்கு குட் நியூஸ்!… ஒரே கணக்கை பல போன்களில் பயன்படுத்தும் புதிய அம்சம்!… எப்படி பயன்படுத்துவது?

வாட்ஸ் அப் கணக்கை பல போன்களில் பயன்படுத்தும் புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இந்த புதிய அம்சத்தை பயனர்கள் பயன்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம்.

வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் சார்பாக அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்த புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இதுவரை லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் போன்ற சாதனங்களில் மட்டுமே ஒரே கணக்கை பயனர்கள் பயன்படுத்த முடிந்தது. தற்போது அது அப்படியே மற்ற போன்களிலும் பயன்படுத்தும் வகையில் அறிமுகமாகி உள்ளது. இதை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதள பயனர்கள் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வாட்ஸ்அப் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் பல்வேறு டிஜிட்டல் சாதனங்களில் தங்களது வாட்ஸ்அப் கணக்கை லிங்க் செய்து பயன்படுத்தும் வகையிலான அம்சத்தை அறிமுகப்படுத்தினோம். அந்த வகையில் தற்போது ஒரே வாட்ஸ்அப் கணக்கை கொண்டு பல போன்களில் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தி உள்ளோம் என வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெப் பிரவுசர்களில் வாட்ஸ்அப் கணக்கை லிங்க் செய்யும் அதே வழியில் பயனர்கள் மற்ற போன்களுடன் தங்கள் கணக்கை லிங்க் செய்து கொள்ளலாம். வாட்ஸ்அப் செயலியில் ‘Linked Devices’ பிரிவிக்குs சென்று பயனர்கள் தங்கள் கணக்கை மற்ற போன்களுடன் லிங்க் செய்து கொள்ளலாம். வரும் நாட்களில் இந்த அம்சம் படிப்படியாக உலக அளவில் பயனர்களின் பயன்பாட்டுக்கு வரும் என மெட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

உங்க ரகசிய சாட்களை இனிமேல் யாராலும் பார்க்க முடியாது!... வாட்ஸ் அப்பில் வந்துவிட்டது Chat Lock!

Wed May 17 , 2023
வாட்ஸ்-அப் செயலியில் சாட் ஹிஸ்டரியை பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் Chat Lock என்ற புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன. குறுந்தகவலை பகிர்ந்து […]

You May Like