fbpx

குட்நியூஸ்.. கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.36.50 குறைந்துள்ளது..

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை திருத்தப்படுகின்றன. வீட்டு உபயோகத்திற்கு 14.20 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிகப் பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் விநியோகம் செய்யப்படுகின்றன.

சிலிண்டர்

இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.36.50 குறைந்துள்ளது. அதன்படி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.36.50 குறைக்கப்பட்டு ரூ.2,141க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஆனால் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.1,068.50-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

குரங்கு அம்மை vs பெரியம்மை.. : 2 நோய்களிலும் அறிகுறிகள் எவ்வாறு வேறுபடுகின்றன..?

Mon Aug 1 , 2022
குரங்கு அம்மை மற்றும் பெரியம்மை ஆகியவற்றுக்கு இடையே தோல் வெடிப்பு மற்றும் காய்ச்சல் போன்ற சில அறிகுறிகளின் பொதுவான தன்மை மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், இரண்டு வைரஸ் நோய்களின் அறிகுறிகள் வெவ்வேறு வழிகளில் வெளிப்படுகின்றன என்று மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். குரங்கு அம்மை என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வைரஸ் நோயாகும். அதன் அறிகுறிகள் பெரியம்மை நோயின் அறிகுறிகளைப் போலவே இருக்கும், அதே சமயம் அது குறைவான தீவிரத்தன்மை […]
குரங்கம்மைமீண்டும் தீயாய் பரவும் குரங்கு அம்மை..!! சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவிப்பு..!!யால் பாதிக்கப்பட்டோருக்கு இதய நோய்கள்..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

You May Like