இந்த நாட்களில் நம்மில் பெரும்பாலோர் நமது கேள்விகளுக்கான உடனடி பதில்களுக்கு கூகுள் பக்கம் திரும்புகிறோம். கூகுள் என்பது நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் தினசரி செய்திகளையும் வழங்கும் தகவல் களஞ்சியமாகும்.
இது நமக்கு தகவல் தரும் தளம். அதில் எந்தக் கேள்வி கேட்டாலும் உடனே பதில் அளிக்கப்படும். குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், பாதுகாப்பு காரணங்களுக்காக தொழில்நுட்ப விதிகள் கடுமையாக்கப்படுகின்றன.
ஆனால் தற்போது கூகுளில் நீங்கள் நினைப்பது எல்லாம் தேடிவிட முடியாது. எல்லா கேள்விகளையும் உங்களால் கேட்கவும் முடியாது. ஏனெனில் கூகுளில் சில கேள்விகளுக்கான பதிலை எடுப்பது சிக்கலை ஏற்படுத்தலாம்.
அந்த வரிசையில் இதையெல்லாம் கூகுளில் தேடினால் உங்களுக்கு பிரச்சனை ஏற்படலாம் என்று நிபுணர்கள் மக்களுக்கு எச்சரிக்கின்றனர்.
என்னவென்று தெரியுமா வெடிகுண்டு தயாரிக்கும் வழிமுறைகள் பற்றி, குழந்தைகளை வைத்து துஷ்பிரயோகம் பண்ணும் வீடியோக்கள், பிரஷர் குக்கர் வெடிகுண்டு, குழந்தைகளின் ஆபாசப் படங்கள், செயல்முறை, போதைப்பொருள் பற்றிய தகவல், மற்றும் கருக்கலைப்பு தகவல் இவ்வாறு கூகுளில் தேடினால், போலீஸ் உங்களை தேடி வரும் என்று எச்சரித்துள்ளனர்.