fbpx

நாய் குறுக்கே வந்ததால் விபத்து..! பைக்கில் சென்றவர் தூக்கி வீசப்பட்டு பலி..!

தூத்துக்குடி அருகே நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சபம்வம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே கோவில்பட்டியில் , சுபாநகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் . இவர் அரசுப் பேருந்து ஒட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக நாய் குறுக்கே வந்துள்ளது. அப்போது பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இந்த சம்பவத்தில் தலையில் அடிபட்டதில் அவர் மயங்கினார். அவ்வழியாக வந்தவர்கள் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் , சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சாலையில் அவர் பைக்கில் சென்று கொண்டிருக்கின்றார். அந்த சாலையில் இரண்டு மூன்று நாய்கள் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றது. அதில் ஒரு நாய் இவர் சென்ற வாகனத்தின் குறுக்கே செல்கின்றது. பிரேக் பிடிக்க முயற்சி செய்யும் சீனிவாசன் பைக்கில் இருந்து சீனிவாசன் தூக்கி வீசப்படுகின்றார். இந்த காட்சிகள் பார்ப்போரை கலங்கச் செய்கின்றது. தலைக்கவசம் அணியால் சென்றதே உயிரிழப்புக்கு காரணம் என போலீசார் கருத்து தெரிவித்துள்ளனர். சிறிய சாலை ஆனாலும் , இது போன்ற உயிரிழப்புகளைத் தடுக்க பொதுமக்கள் கட்டயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் நாய்கள் அதிகளவில் இருப்பதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது போன்ற சம்பவங்களைத் தடுக்க நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Next Post

ஓணம் பண்டிகை- 8 மாவட்டத்திற்கு விடுமுறை...

Sat Sep 3 , 2022
ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பம் 8 ம் தேதி எட்டு  மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை , கோவை , நீலகிரி , திருப்பூர் , கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஏற்கனவே உள்ளூர் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   இதை ஈடுகட்ட செப்டம்பர் 10ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் […]

You May Like