உத்திரபிரதேச மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரியின் மகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மூன்று நபர்களை உத்தரபிரதேச மாநில காவல்துறையினர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவில் அரசு அதிகாரியாக இருப்பவரின் மகள் அங்குள்ள பிரபல மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி கடத்தப்பட்ட மாணவி வாகனத்தில் வைத்து மூன்று நபர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். பாலியல் பலாத்காரம் செய்த பின் அந்தப் பெண்ணை காரிலிருந்து வீசி சென்றுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர் படித்து வரும் கல்லூரிக்கு அருகில் டீக்கடை வைத்திருக்கும் அஸ்லம் மற்றும் சுகைல் என்ற 2 நபர்களும் சத்தியம் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர், அரசு அதிகாரியின் மகள் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் லக்னோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள காவல் துறையினர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். அஸ்லம் என்ற நபர் மற்ற இரண்டு நபர்களுடனும் சேர்ந்து இந்த கூட்டு பாலியல் வன்புணர்விற்கு திட்டம் தீட்டியதாக காவல்துறை விசாரணையில் வெளியாகி இருக்கிறது.