சென்னை ராமாபுரம் 5வது குறுக்கு தெரு பாலாம்பிகை நகரை சேர்ந்தவர் தனசேகர்(28) இன்ஜினியரிங் முடித்திருந்த இவர் அரசு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார் அப்போது சிவகங்கை மாவட்டம் திருவோணத்தைச் சார்ந்த ஞான கருணாகரன்(46) என்பவர் கடந்த 2018 ஆம் வருடம் இவருக்கு அறிமுகம் ஆகி உள்ளார்.
அவர் பதிவுத்துறையில் சார் பதிவாளர் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து சென்னை பூக்கடை பகுதியில் வைத்து 18,13,600 ரூபாயை வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட ஞானகருணாகரன் அவர் உறுதியளித்தபடி வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே இது தொடர்பாக தனசேகர் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் அதன்படி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் தனசேகர் மட்டும்தான் மேலும் சிலரிடமும் இதே வானியல் பணம் பெற்று அவர் மோசடி செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.