fbpx

15-ம் தேதி காலை 11 மணி முதல் கிராம சபைக் கூட்டம்…! என்னென்ன செய்ய வேண்டும்..? ஆசிரியர் உத்தரவு…

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம சபைக் கூட்டங்களில் கீழ்க்காணும் பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை உபயோகப்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து விவாதிக்கப்படும்.

மேலும் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படும். பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு செலவு கணக்கு (படிவம் 30-ன் சுருக்கம்) வைக்கப்பட வேண்டும் என் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Vignesh

Next Post

நாங்குநேரி சம்பவம்...! 2 குழந்தைகளின் கல்வி செலவுகளை நானே ஏற்கிறேன்...! அமைச்சர் அறிவிப்பு...!

Sat Aug 12 , 2023
நாங்குநேரியில் தாக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் கல்வி செலவுகளை தானே ஏற்க உள்ளதாக அமைச்சராக அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகனும், 14 வயது மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வந்துள்ளனர். பள்ளியில் மாணவர்களுக்கு இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டதன் காரணமாக மகன் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே […]

You May Like