fbpx

பெரும் சோகம்..!! கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்..!!

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் இரண்டாம் கான்ஸ்டென்னின் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.

கிரீஸ் நாட்டின் மன்னாராக 1964ஆம் ஆண்டு முதல் 1973 வரை பதவி வகித்தவர் இரண்டாம் கான்ஸ்டான்டைன். இவர் தனது 23ஆம் வயதில் கிரீசின் மன்னராக அரியணை ஏறினார். கிரீசில் மன்னாராட்சி முறைக்கு 1967ஆம் ஆண்டு எதிர்ப்பு எழுந்த நிலையில், 2ஆம் கான்ஸ்டான்டைனின் நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர், 1974இல் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு மக்களாட்சி நடைமுறைக்கு வந்ததால், அவர் அதிகாரப்பூர்வமாக மன்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மக்களாட்சி மலர்ந்த நிலையில் பின்னர் நாடு திரும்பினார்.

பெரும் சோகம்..!! கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்..!!

இதற்கிடையே, கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரான 2ஆம் கான்ஸ்டான்டைன் இன்று காலமானார். அவருக்கு வயது முதிர்வால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ஏதேன்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், 2-ம் கான்ஸ்டான்டைனின் மரணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Chella

Next Post

மனித உரிமை மீறல்..!! ராஜபக்சே சகோதர்களுக்கு தடை..!! கனடா அரசு அதிரடி நடவடிக்கை..!!

Wed Jan 11 , 2023
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல்களை ராணுவம் அரங்கேற்றியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் அதிபரும், உள்நாட்டுப் போரின்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவருமான கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது. இதேபோல, 2000இல் மிழர்களை படுகொலை செய்ததாக மரண தண்டன விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரி சுனில் ரத்னாயகே, கடற்படை […]
மனித உரிமை மீறல்..!! ராஜபக்சே சகோதர்களுக்கு தடை..!! கனடா அரசு அதிரடி நடவடிக்கை..!!

You May Like