fbpx

மக்களே..! வரும் 27-ம் தேதி எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்…! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு….

எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் நலன் கருதி அனைத்து எண்ணெய் மற்றும் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள், எரிவாயு நிறுவன விநியோகஸ்தர்கள், எரிவாயு நுகர்வோர்கள், தன்னரர்வலர்கள் ஆகியோர்களுடன் “எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்” நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் 27-09-2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. எரிவாயு விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து மனுக்கள் அளிக்கலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி அனைத்து துறையின் முதல் நிலை அலுவலர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களுடன் “காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம்” நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் 30.09.2024 திங்கள் கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. பொது விநியோகத் திட்டம் தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் மேற்படி கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

English Summary

Grievance redressal meeting of gas consumers will be held on 27th in Namakkal district.

Vignesh

Next Post

இன்று தேய்பிறை அஷ்டமி..!! பைரவரை இப்படி வழிபட்டால் கடன் தீரும், காரியத் தடைகள் நீங்கும்..!!

Wed Sep 25 , 2024
Worshiping Bhairava on the day of Teipira Ashtami is said to bring great results.

You May Like