லட்சுமி தேவியின் அருள் கிடைக்க ஆண்கள் என்னென்ன பழக்கத்தை கைவிட வேண்டும் என்பதை குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு ஆண் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும், தொடர்ந்து வறுமையில் இருப்பதற்கு முக்கிய காரணம் அவரிடம் இருக்கும் சில கெட்ட பழக்கங்கள் தான். ஆண் இரவு பகல் என பாராமல் தன் குடும்பத்திற்காக கடினமாக உழைத்தாலும், அவரிடம் இருக்கும் சில பழக்க வழக்கங்களால் அவரால் தன் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு மாற்ற முடியாது. அதுமட்டுமின்றி, அவர் கடினமாக உழைத்தாலும் கூட வெற்றி, உயர் பதவி போன்றவற்றை அடைய வாய்ப்பே இல்லை. எனவே, அவர்கள் தங்களது சில பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டால் அவர்களது வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும்.
பெண்களை இழிவுப்படுத்தக் கூடாது :
ஒரு ஆண் தன் மனைவியை இழிவுபடுத்துவது, அவளை துன்புறுத்துவது, அவளிடம் மோசமாக நடந்து கொள்வது மற்றும் அவளிடம் துஷ்பிரயோகம் செய்வது போன்ற விஷயங்களால் தான் அந்த ஆணின் வீட்டில் வறுமை வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இப்படி ஒரு வீட்டில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால், அந்த வீட்டில் லட்சுமி தேவி தங்க விரும்புவதில்லை. இதனால் அவர்கள் எப்போதும் கடனில் இருப்பார்கள். ஒருவேளை பணம் இருந்தாலும், அது நீண்ட காலத்திற்கு தங்காது.
வேலையை சரியாக செய்யாமல் இருப்பது:
ஒரு ஆண் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்யாமல் ஏனோதானோ என்று இருந்தால் அவரிடம் பணம் தாங்காது. ஒழுக்ககேடாக நடந்து கொள்வது, வீண் விஷயங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடிப்பது, தவறான நண்பர்களுடன் பழக்கத்தை வைத்துக் கொள்வது என இதுபோன்ற குணம் கொண்டிருக்கும் ஆண் வாழ்க்கையில் ஒருபோதும் முன்னேற்றத்தை காண முடியாது.
சோம்பேறித்தனம் :
அதுபோல, காலையில் சூரியன் உதித்த பிறகும் பல ஆண்கள் படுக்கையில் இருந்து எழ விரும்புவதில்லை. இதுதவிர, அவர்கள் பல் துலக்கவும், குளிக்கவும் சோம்பேறித்தனம் படுகின்றன. மேலும், அவர்கள் ஒரு பொருளை வைக்க வேண்டிய இடத்தில் வைக்காமல், கண்ட கண்ட இடங்களில் வைக்கும் பழக்கம் இருக்கும். இப்படிப்பட்டவர்களை லட்சுமி விரும்புவதில்லை. லட்சுமி தேவி இல்லாத வீட்டில் சண்டை சச்சரவுகள், பதற்றம், எதிர்மறை ஆற்றல், வறுமை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். முக்கியமாக அந்த ஆணின் கையில் ஒருபோதும் பணம் தங்கவே தங்காது.
Read More : மாதம் ரூ.40,000 சம்பளம்..!! அரசு துறையில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!