NEET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரை நடைபெற்றது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு https://neet.nta.nic.in இணையதளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாணவர்கள் இந்த நுழைவுச் சீட்டை சிரமமின்றி இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்தாண்டு நீட் நுழைவுத்தேர்வு நடைபெறகிறது. இதற்கான தேர்வு வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. இதற்காக, நாடு முழுவதும் 546 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நீங்கள் முதலில் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
பின்னர் முகப்புப் பக்கத்தில், NEET UG Admit Card என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
அதில் பிறந்த தேதி உள்ளிட்ட உங்கள் உள்நுழைவு விவரங்களை பதிவு செய்யவும்.
பின்னர் உங்கள் NEET UG அனுமதி அட்டையின் Printout எடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்கள் ஆடைகள் பிரச்சனை தொடர்பான விபரத்தை தேர்வு மையத்தில் இரண்டு மணிநேரம் முன்னதாக தெரிவிக்க வேண்டும். கைக்கடிகாரம், புத்தகங்கள், காகிதத் துண்டுகள், பத்திரிகைகள், ப்ளூடூத், ஹெட்போன், பேனா, உளவு கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், ஸ்டோரேஜ் டிவைஸ் உள்ளிட்டவை தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படாது.