குழந்தைகளின் பள்ளிப்பைகளில் கண்ணிவெடியை வைத்து ஹமாஸ் அமைப்பினர் அப்பாவி பொதுமக்களை கொன்றதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலுக்குள் ஊடுருவி நடத்திய தாக்குதலில், 1,400 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தவிர, 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதற்கு பதிலடி தரும் வகையில், பாலஸ்தீன அகதிகள் வசிக்கும் காசா பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு மீது, இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது. போராக அறிவித்து நடந்து வரும் இந்த தாக்குதலில், இதுவரை 4,137 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவமனை, கட்டடங்கள் உள்ளிட்டவைகள் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலின் வான்வழி பதிலடி தாக்குதலால் காசா பகுதி உருக்குலைந்தது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீர், உணவு, மருத்துவ அடிப்படை வசதிகளின்றி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காசா பகுதியை இஸ்ரேல் ராணுவம் முழுவதுமாக முற்றுகையிட்டுள்ளது. மற்றொரு அண்டை நாடான எகிப்தில் இருந்து காசாவுக்கு செல்லும் ரபா பகுதியையும் இஸ்ரேல் மூடியது. மேலும், காசா பகுதிக்கான மின்சாரம், உணவுப் பொருட்கள், எரிபொருள், குடிநீர் உள்ளிட்டவற்றின் வினியோகத்தையும் இஸ்ரேல் நிறுத்தியது. இதனால், காசாவில் உள்ள, 23 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, படிப்படியாக காசா பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகளின் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை ஐடிஎஃப் யஹலோம் பிரிவு தொடர்ந்து சேகரித்து வருகிறது. அந்தவகையில், தற்போது, வயல்வெளி ஒன்றில் இருந்து குழந்தைகளின் ரோஸ் கலர் பள்ளிப்பை ஒன்று கிடைத்துள்ளது. அது தொடர்பான வீடியோ ஒன்றை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, அந்த பள்ளிப்பையில் ரிமோட் ஆக்டிவேட் செய்யப்பட்ட 7 கிலோ எடையுள்ள வெடிபொருள் இருந்தது தெரியவந்தது. அப்பாவி பொதுமக்களை கொல்ல வேண்டுமென்றே பள்ளிப்பையில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்தவாரம் 33 வயதான கனேடிய பெண் Adi Vital-Kaploun-ன் உடலில் கண்ணிவெடி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அதாவது யாரவது அவரை நகர்த்த முயன்றால் வெடிக்கும் வகையில் பொருத்தப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இரண்டு மகன்கள் முன்னிலையில் ஆதி சுட்டுக்கொல்லப்பட்டார். ஹமாஸ் அமைப்பால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள 200 பேரில் சிலர் வெடிபொருட்களை ஏற்றிச் செல்லலாம் என்றும், அவை இஸ்ரேலின் வரவிருக்கும் படையெடுப்புப் படையுடன் மோதாமல் போகலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுக் கவுன்சிலின் நிபுணரான புரூஸ் ஹாஃப்மேன், கடந்த சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்தார். காசாவிற்குள். “இந்த இடங்கள் மற்றும் பணயக்கைதிகள் கூட வெடிபொருட்களால் நிரம்பியிருக்கலாம்” என்று புரூஸ் ஒரு மாநாட்டில் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.