fbpx

ஹார்லி-டேவிட்சன் vs டிரையம்ப்… போட்டியில் எது ஜெய்க்கும்?

இந்திய சந்தையில் வெளிநாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனங்களான ஹார்லி-டேவிட்சன் மற்றும் டிரையம்ப் போட்டி போட்டு தங்களது புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதில் ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எக்ஸ்440 பைக் மிக சமீபத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த நிறுவனத்தில் இருந்து ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் என்ற இரு மோட்டார்சைக்கிள்கள் ஜூலை 5ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளன.

யுகே-இல் ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்டுவிட்ட இந்த டிரையம்ப் பைக்குகளில் ஸ்பீடு 400 ஆனது ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கிற்கு நேரடி போட்டி மாடலாக விளங்கும். இவை இரண்டிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை இனி பார்க்கலாம். மேற்கூறப்பட்ட 3 மோட்டார்சைக்கிள்கள் வெளிநாடுகளில் இருந்து வெளியீடு செய்யப்பட்டாலும், இவை மூன்றும் முக்கியமாக இந்திய சந்தையையே டார்க்கெட் செய்து விற்பனைக்கு வருகின்றன. இதனாலேயே ஹார்லி-டேவிட்சன் இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் பிராண்டான ஹீரோ மோட்டோகார்ப்பின் உதவியுடனும், டிரையம்ப் நிறுவனம் பஜாஜ் ஆட்டோ உடன் கூட்டணி சேர்ந்தும் இந்த பைக்குகளை வடிவமைத்துள்ளன.

ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440, டிரையம்ப் ஸ்பீடு 400 இந்த இரண்டில் எக்ஸ்440 அளவில் பெரிய என்ஜினை கொண்டதாக விளங்குகிறது. ஏனெனில் இதில் 440சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-ஆயில் கூல்டு, 2-வால்வு செட்-அப்பை கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதுவே, டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கில் 398.15சிசி-இல் லிக்யுடு-கூல்டு, DOHC, சிங்கிள்-சிலிண்டர் 4-வால்வு செட்-அப்பை கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அளவில் பெரிய என்ஜினை கொண்டிருப்பினும், ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கில் அதிகப்பட்சமாக 27 பிஎச்பி மற்றும் 38 என்எம் டார்க் திறன் வரையில் மட்டுமே இயக்க ஆற்றலை பெற முடியும். ஆனால், டிரையம்ப் ஸ்பீடு400 பைக்கில் 39.5 பிஎச்பி மற்றும் 37.5 என்எம் டார்க் திறன் வரையில் கிடைக்கும்.

ஹார்லி-டேவிட்சன் பைக்கில் உடனடி பிக்அப்பிற்கு தேவையான டார்க் திறன் அதிகம் கிடைக்கும். இந்த இரு பைக்குகளிலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.எக்ஸ்440, ஸ்பீடு 400 இவை இரண்டிலும் ஒற்றை-பக்க எக்ஸாஸ்ட் குழாயே பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் டிரையம்ப் மாடலில் மேல்நோக்கி வளைக்கப்பட்ட டிசைனில் எக்ஸாஸ்ட் குழாய் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இதன் எக்ஸாஸ்ட் குழாயை டபுள்-பேரல் டிசைனிலும் கூடுதல் தொகையை செலுத்தி பெறலாம். ஆனால் ஹார்லி-டேவிட்சன் பைக்கில் இந்த அம்சங்கள் எல்லாம் இல்லை.

ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அதன் எக்ஸ்440 பைக்கை ரூ.2.29 லட்சம் என்ற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.69 லட்சம் ஆகும். டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் இந்திய விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஜூலை 5ஆம் தேதி இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.2.5 லட்சம் – ரூ.3.2 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம்.

Maha

Next Post

’கூல் சுரேஷ் சொன்னது நடந்துருச்சு’..!! பைக் மீது காரை மோதிய டிடிஎஃப் வாசன்..!! பாய்ந்தது வழக்கு..!!

Tue Jul 4 , 2023
சர்ச்சைக்குரிய யூடியூபராக வலம் வருபவர் டிடிஎஃப் வாசன். யூடியூப்பில் கிடைத்த புகழ் வெளிச்சத்தை வைத்து தற்போது சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். அந்த வகையில், தமிழில் இவர் நடிப்பில் உருவாகும் முதல் படத்திற்கு மஞ்சள் வீரன் என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் பூஜை கடந்த ஜூன் 29ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. மஞ்சள் வீரன் படத்தில் நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். […]
’கூல் சுரேஷ் சொன்னது நடந்துருச்சு’..!! பைக் மீது காரை மோதிய டிடிஎஃப் வாசன்..!! பாய்ந்தது வழக்கு..!!

You May Like