கர்நாடகா மாநிலத்தில் ஹாசன் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் ஹாசனாம்பா தேவி அம்மன் கோயில் பிரசித்தி பெற்றதாக அமைந்துள்ளது. ஹாசனாம்பா கோவில் இப்பகுதியில் அமைந்துள்ளதால் இப்பகுதிக்கும் ஹாசன் என்ற பெயர் வந்தது. இக்கோயிலின் சிறப்புகளையும், வரலாறுகளையும் குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
சுமார் 12 ஆம் நூற்றாண்டில் கிர்ணப்பா நாயக்க பாளையக்காரரின் காலத்தில் ஹாசனம்பா கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயில் ஒரு ஆண்டிற்கு பத்து நாட்கள் மட்டுமே திறக்கப்படுமாம். பத்து நாட்களும் இரவு, பகல் என்று முழுவதுமாக கோயிலின் வாசல் திறந்தே தான் இருக்கும். இந்த பத்து நாட்கள் மட்டுமே ஹாசனம்பாவுக்கு பூஜை நடத்தப்படும்.
ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே திறந்து வைத்துவிட்டு, பலிபட்யாமி என்ற தினத்தில் மூடப்படுகிறது. அன்றைய தினத்தில் கோயிலின் தீபம் ஏற்றப்பட்டு அடுத்த வருடம் கோயில் திறக்கும் வரை இந்த தீபம் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் என்பது இக்கோயிலின் சிறப்பாகும்.
மேலும் ஹாசனாம்பா கோயில் மூடப்படும் தினத்தில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யும் பூக்கள், மாலைகள், அம்மனுக்கு படைக்கப்படும் பிரசாதங்கள் என அனைத்துமே அடுத்த வருடம் கோயில் திறக்கும் வரை கெட்டுப் போகாமல் அப்படியே புதிது போல இருக்குமாம். இந்த அதிசயத்தை காண்பதற்காகவே ஒவ்வொரு வருடமும் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Read more ; “ஒரே ரூமில் இருந்த 8 பேர்…”; அலறியடித்து வெளியே ஓடிய நடிகை..