2022-23ம் நிதியாண்டுக்கான வருமான வரியை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது, வரி ஏய்ப்பு செய்ய வகையில் போலியான வாடகை ரசீதுகளைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மாத சம்பளம் வாங்குபவர்கள் தவறான வருமான வரி கணக்குகளை சமர்ப்பித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது போலி வாடகை ரசீதுகளை முதல் நன்கொடை செலுத்தியதாக தவறான ரசீது கொடுப்பது போன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், அதுமட்டும் இல்லாமல் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரி செலுத்தியவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தபோது சிலருக்கு ரீபண்ட் தொகை ரூ.15,490 வரவு வைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வருகிறது. மத்திய அரசின் PIB Facat Check இதுபோன்ற செய்திகள் அனுப்பப்பட்டு தனிப்பட்ட தகவல்கள் சேகரிப்படுவதை கண்டறிந்துள்ளது. வருமான வரித்துறை இதுபோன்ற செய்திகளை அனுப்பவில்லை என்றும் இதுபோன்ற செய்தியை நம்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.