fbpx

17 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தால் புற்றுநோய் அழியுமா..?

எக்ஸ் தளத்தில் சமீபகாலமாக 17 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தால் புற்றுநோய் செல்கள் அழியும் என்ற கூற்று பரவி வருகிறது. இது குறித்து கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் பூஜா குல்லாரின் கருத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

17 அல்லது 18 மணி நேர தொடர் உண்ணாவிரதம் உடலில் பழைய மற்றும் சேதமடைந்த செல்களை தன்னியக்கவியல் எனப்படும் செயல்முறையின் மூலம் அழிக்கிறது. இதனால் உடலின் புற்றுநோய் செல்கள் நீக்கும் என கருத்து பரவி வருகிறது. இது குறித்த ஆய்வுகள் இன்னும் விலங்குகள் மீது தான் நடந்து கொண்டிருக்கிறதே தவிர எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை. தன்னியக்கவியல் செயல்முறையின் மூலம் தவறான செல்லுலார் கூறுகளை அழிக்க முடியும். ஆனால் புற்றுநோய் செல்களை அழிக்கும் என்ற எந்த ஒரு அறிவியில் ஆதாரமும் இல்லை.

இதுகுறித்து புதுதில்லியில் உள்ள நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்ப்பிட்டலின் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் பூஜா குல்லார் கூறுகையில், 2016ஆம் ஆண்டு ஒரு ஆய்வு அறிக்கையில் தினமும் 13 மணிநேரம் உண்ணாவிரதம் இருப்பது மார்பக புற்றுநோய் மற்றும் உடல் புற்றுநோய் செல்களை அழிக்கும் என பரிந்துரை செய்யப்பட்டது. இருப்பினும் ஒரே இரவில் நீண்ட நேரம் உண்ணாவிரதம் இருப்பது நாள்பட்ட புற்றுநோய் செல்களை அழிக்குமா என்பதை வலியுறுத்த கூடுதல் ஆய்வுகள் தேவை என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். தன்னியக்கவியல் என்பது ஒரு சிக்கலான செயல்முறை. இது செல்லுலார் பழுதுபார்ப்பதில் துணை வகிக்கிறது. இருப்பினும் புற்றுநோய் செல்களை அகற்றுவதில் நேரடி பங்கு வகிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.

Read more: 100 நோய்களுக்கு ஒரே தீர்வு; இந்த பொடியை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்..உங்கள் குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்..

English Summary

health benefits of fasting for 17 hours

Next Post

வாவ்..! சுற்றுலாப் பயணிகளுக்கான 24x7 கட்டணமில்லா உதவி மையம்...!

Fri Dec 13 , 2024
24x7 toll-free helpline for tourists

You May Like