நாம் அன்றாடம் நம்முடைய உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளில் ஒன்று தான் முள்ளங்கி. ஆனால், இந்த முள்ளங்கியில் இருக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை பெரிதாக யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த முள்ளங்கியில் விட்டமின் பி, சி, கே பொட்டாசியம், நார்சத்து போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதயத்தை பலப்படுத்துவதற்கு தேவைப்படும் அந்தோனிசியனின் முள்ளங்கியில் நிறைவாக இருக்கிறது.
முள்ளங்கி சாப்பிட்டு வருவதால், இரத்த அழுத்தம் சீராகி, இரத்த கொதிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. முள்ளங்கி, இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. ஆகவே இரத்த சர்க்கரையை அது கட்டுக்குள் வைக்கிறது.
அத்துடன், உடலுக்கு தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் விட்டமின் சி முள்ளங்கியில் இருக்கிறது. இதை சாப்பிட்டு வருவதால், பசி அதிகமாக இருக்கும். முள்ளங்கி சாப்பிடுவதால், செரிமான மண்டலம் வலுவடைந்து, உணவு நன்றாக ஜீரணமாகும். மலக்குடலில் இருக்கின்ற கழிவுகளை நீக்கி, குடலை சுத்தம் செய்யும்.
அத்துடன், இந்த முள்ளங்கியை சாப்பிட்டு வருவதால், கல்லீரலில் இருக்கின்ற கழிவுகள் வெளியாகும். அதன் மூலமாக, உடல் சுத்தமாகிறது. முள்ளங்கியை தொடர்ந்து, சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.