fbpx

கனமழை அலெர்ட்!… 2 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!… மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!

கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் 1-5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு சில நாட்களாக இரவு முழுவதும் மழை பெய்தது. அந்த வகையில், கிருஷ்ணகிரி முதல் சென்னை வரை உள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு வேலூர் மற்றும் ராணிப்பேட்டை பகுதியில் இடி மின்னலோடு மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இரவு முழுவதும் பெய்த மழை தொடர்ந்து நீடித்து வருவதால் பள்ளி மாணவர்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார். 

இதேபோல், திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கான அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் அந்த மாவட்டங்களிலும் விடுமுறை விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Kokila

Next Post

செம சான்ஸ்...! பெட்ரோல் நிலையம் அமைக்க குறைவான வட்டியில் கடன்...! யார் யாருக்கு இது பொருந்தும்...?

Tue Sep 26 , 2023
பெட்ரோல் நிலையம் அமைக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு குறைந்த வட்டியில் தாட்கோ மூலமாக கடனாக வழங்கப்படும். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனைத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் பெட்ரோல் நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி […]

You May Like