fbpx

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை..!! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்..!!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இம்முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்தாண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று காலை வெளியான அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் 13ஆம் தேதி ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இந்நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அறிவிப்பின்படி, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, ஈரோடு, தூத்துக்குடி, விருதுநகர், சேலம், பெரம்பலூர், தருமபுரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Read More : PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இதை செய்தால் ரூ.7 லட்சம் கிடைக்கும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Chella

Next Post

முத்தக்காட்சிகள் குறித்து பேசிய பிரபலம்...! பெரிய பட வாய்ப்புக்காக செய்தேன்...

Sat May 11 , 2024
பிரபல நடிகையான சோனாக்சி சின்ஹா முத்தக்காட்சிகள் குறித்து சமீபத்திய பேட்டில் ஒன்றில் மனம் திறந்துள்ளார். பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா முன்னணி நாயகியாக வலம் வருகிறார். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான தபாங் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் இவர் ரஜினிக்கு ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து 14 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும், சோனாக்சி சின்ஹா பேட்டி ஒன்றை […]

You May Like