fbpx

இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்….

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 8-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

இன்று முதல் 6-ம் தேதி வரை குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, தமிழக – ஆந்திர கடலோரப் பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்‌.

இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை லட்சத்தீவு பகுதி, கர்நாடகா – கேரளா கடலோரப்‌
பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. எனவே இந்த நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

உமேஷ் கோல்கே கொலை வழக்கு: தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என என்.ஐ.ஏ விசாரணை..!

Mon Jul 4 , 2022
மராட்டிய மாநிலம் அமராவதியை சேர்ந்தவர் உமேஷ் கோல்கே (54). இவர் மருந்து கடை வைத்துள்ளார். உமேஷ் கோல்கே நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சை கருத்தை கூறிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக, வாட்ஸ்அப் குழுக்களில் தகவல்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் இது பற்றி பேஸ்புக்கில் பதிவிட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அவர் கடந்த மாதம் 21-ந் தேதி மருந்து கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று […]

You May Like