fbpx

5 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை..! எங்கெங்கு தெரியுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை, நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை..! எங்கெங்கு தெரியுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

ஜூலை 5, 6, 7, ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

Heavy rain lashes Chennai, causes traffic snarls, flooding; IMD issues red  alert | Latest News India - Hindustan Times

இன்று குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக – ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் ( 04.07.2022, 05.07.2022) குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக- ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

17 districts in Tamil Nadu likely to get heavy rains till May 18- The New  Indian Express

இன்று முதல் 7ஆம் தேதி வரை இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா – கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Chella

Next Post

’பெண்கள் அழகாக இருந்தால் கூடுதல் சம்பளம்’..! சர்ச்சையில் சிக்கிய திமுக எம்எல்ஏ..!

Sun Jul 3 , 2022
பெண்கள் அழகாக இருந்தால் கம்பெனியில் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்று திமுக எம்எல்ஏ காந்திராஜன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி, வேலுச்சாமி எம்பி, வேடசந்தூர் எம்.எம்.ஏ. காந்திராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், பேசிய எம்எல்ஏ காந்திராஜன், பெண்கள் அழகாக இருந்தால் […]
’அரசு ஊழியர்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் பணிபுரிய வேண்டும்’..!! முதலமைச்சர் அதிரடி

You May Like