fbpx

தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை..!! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஜூலை 11ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஜூலை 12 முதல் ஜூலை 16ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

ஹாய் ரமேஷ்.. ஹாய் சுரேஷ்..!! ஒரே நேரத்தில் இருவரை காதலித்த இளம்பெண்..!! ரகசியமாக வந்த காதலர்கள்..!! நள்ளிரவில் வெடித்த சண்டை..!!

Mon Jul 10 , 2023
ஒரு பெண்ணின் காதலுக்காக இரு இளைஞர்கள் நள்ளிரவில் சண்டை போட்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் சியோனியில் உள்ள பர்கத் நாகா என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு இரு இளைஞர்கள் நடுரோட்டில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அங்கு ஒரு இளம் பெண்ணும் நின்றுகொண்டிருந்தார். இதனைப் பார்த்த அங்கிருந்த நபர் ஒருவர், போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார், சண்டையிட்டுக் கொண்டிருந்த அந்த இரு […]

You May Like