கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது..
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.. குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இந்த சூழலில் வரும் 9-ம் தேதி வரை மழை தொடரும் என்று வானிலை மையம் ஏற்கனவே கூறியிருந்தது..
இந்நிலையில் கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. மேலும் தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. நாளை மறுதினம் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.. சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது..