பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மூலிகை பெட்ரோல் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் பிள்ளை. இவர் உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை, மத்திய அரசின் கூட்டு திட்டத்தில் மூலிகை பெட்ரோலை பதிவு செய்துள்ளார். கழிவு நீர் மூலமும், விவசாய கழிவுகளைக் கொண்டும் பயோ டீசல், பயோ பெட்ரோல், பயோ சமையல் எரிவாயு தயாரித்த ராமர்பிள்ளை அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர பல ஆண்டுகளாக போராடி வருகிறார். 500 கோடி லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிக்கும் அளவு மூலப் பொருட்களை சேமித்து வைத்துள்ளதாகவும், உலக காப்புரிமை பெறுவதற்கு முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது மூலிகை பெட்ரோல் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார். இது பயன்பாட்டுக்கு வந்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் 14 ரூபாய்க்கும், டீசல் 18 ரூபாய்க்கும் கிடைக்கும். தனது மூலிகை பெட்ரோல் மூலம் அனைத்து வாகனங்களையும் இயக்கலாம் என்றும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். மேலும், மூலிகை பெட்ரோல் மூலம் சமையல் எரிவாயுவை உருவாக்க முடியும் என்றும் அதற்காக கூடுதலாக மட்டும் செலவாகும் என்று தெரிவித்தார்.