ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே குப்பம் படூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரத்னம் ரெட்டி. இவருக்கு கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், தனது மனைவியை வைத்து தொழில் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி, தனது மனைவி ஸ்ரீதேவியை ஆன்லைன் செயலி மூலம் வீடியோ அழைப்புகளில் நிர்வாணமாகப் பேச கட்டாயப்படுத்தியுள்ளார். இதன் மூலம் அவர் பணம் சம்பாதித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, இதற்கு சம்மதிக்கவில்லை என்றால், பட்டினி போட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
கணவரின் தொல்லைகளைத் தாங்க முடியாமல், ஸ்ரீதேவி, ஒரு செயலியின் மூலம் அழைப்புகளில் நிர்வாணமாகப் பேசி வந்துள்ளார். இதில் சம்பாதித்த பணத்தில் தங்க நகைகளை வாங்கியுள்ளார். இந்நிலையில், முனிரத்னம் மனைவி ஸ்ரீதேவிக்கு ஆபாச ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், அவரது நிர்வாண அழைப்புகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இதன் காரணமாக, தனது மனைவியின் பல ரசிகர்களைப் பார்த்து பொறாமைப்பட்ட கணவர், தனது மனைவியை தனிமைப்படுத்தியது மட்டுமின்றி, வீட்டை விட்டும் வெளியேற்றியுள்ளார். இதையடுத்து, எங்கு போவதென்று செய்வதறியாது முழித்த ஸ்ரீதேவி, இச்சம்பவம் தொடர்பாக அர்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பான புகாரை வழக்குப்பதிவு செய்வதற்கு முன், காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு காவல் அதிகாரி ஒருவர், ஸ்ரீதேவிக்கு வாட்ஸ் அப் மூலம் இரவு ஹோட்டலுக்கு வருகிறாயா..? எனக்கேட்டு மெசேஜ் அனுப்பியுள்ளார். நீதி கேட்க காவல் நிலையம் சென்றபோது, தன்னை ஹோட்டலுக்கு அழைத்த காவல் அதிகாரியும், தனக்கு இழைத்த கொடுமையைப் பற்றியும் திருப்பதி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் கண்ணீருடன் கூறியுள்ளார்.