fbpx

மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.37,328-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒஒரு கிராமுக்கு ரூ.36 உயர்ந்து ரூ.4,666-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.37,328க்கு விற்பனையாகிறது.. இதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.60-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.61,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

’அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் திமுக ஆட்சி கவிழ்ந்து விடும்’..! - அண்ணாமலை எச்சரிக்கை

Fri Jul 22 , 2022
அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் திமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”சொத்து வரி, மின்சாரம், பால் என அனைத்தையும் விலை உயர்த்தியதுதான் திமுக அரசின் சாதனை. தவறை சுட்டிக் காட்டினாலும், பாடம் கற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத அரசு இந்த திமுக அரசு. மக்கள் தான், இந்த விடியா அரசை கேள்வி கேட்க வேண்டும். […]

You May Like