இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக மாற முடியாது என்று இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.
காளி என்ற ஆவணப்படத்தை பிரபல இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கி உள்ளார்.. அந்த படத்தின் போஸ்டரில் கையில் எல்ஜிபிடி கொடி, சிகரெட் உடன் காளி கெட் அப்பில் பெண் ஒருவர் இடம்பெற்றது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது… இந்து கடவுளை அவமதிக்கும் வகையிக் இருப்பதாக கூறி பாஜகவினர் இந்த போஸ்டருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. இந்து மத உணர்வுகளைபுண்படுத்தியதாகக் கூறி டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் லீனா மணிமேகலை மீது தனித்தனி எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.,
இந்நிலையில் இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக மாற முடியாது” என்று இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.. சிவபெருமான் மற்றும் இந்து மத பெண் தெய்வங்களை போல் வேடமணிந்த இரண்டு பேர் புகைபிடிக்கும் புகைப்படத்தை ட்வீட் செய்தார். மேலும் அவரின் ட்விட்டர் பதிவில் “நாட்டுப்புற நாடகக் கலைஞர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை எப்படிப் பதிவு செய்கிறார்கள் என்பதைப் பற்றி பாஜகவிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு செயல்படும் ட்ரோல் ஆர்மிகளுக்கு தெரியாது… இது எனது படத்தில் இல்லை. அன்றாட கிராமப்புற இந்தியாவில் இருந்து எடுக்கப்பட்டது தான் இந்தப் படம்.. இந்த சங்பரிவாரங்கள் தங்கள் இடைவிடாத வெறுப்பு மற்றும் மதவெறியால் இந்தியாவை அழிக்க விரும்புகின்றனர். இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக மாறாது” என்று ட்வீட் செய்துள்ளார்.