மாநாடு படத்தின் போஸ்டர் டிசைனை தற்போது ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் பயன்படுத்தி இருப்பதாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த 2021ம் ஆண்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாநாடு’. இப்படம் டைம் லூப் என்ற கதைகளத்தில் உருவாக்கப்பட்டது, இது தமிழ் சினிமாவில் புதுமையான ஒரு படமாக அமைந்தது. இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இந்நிலையில், மாநாடு படத்தின் போஸ்டர் டிசைனை தற்போது ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் பயன்படுத்தி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. இதையடுத்து, வெங்கட் பிரபு, மாநாடு பட போஸ்டர் டிசைன் செய்தவரின் பெயரை குறிப்பிட்டு அவரை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்ட பதிவில் யூ மேஜிசியன் என அவரை பாராட்டியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? – ராகுல் காந்தியை விளாசிய மோடி!