தென்காசி மாவட்டம் அடுத்த இலத்தூர் பகுதியில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், நேரில் விசாரணை நடத்தி வருகிறார். எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் யார்..? கொலை செய்யப்பட்டது எப்படி..? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கொல்லம் – மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாழடைந்த குளத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 30 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண்ணின் உடலுக்கு அருகில் இருந்த மது பாட்டில்கள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தென்காசி மாவட்டத்தில் யாரேனும் சமீபத்தில் காணாமல்போனார்களா என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர்.