fbpx

இல்லத்தரசிகளே..!! குறைந்த விலையில் தக்காளி, வெங்காயம் விற்பனை..!! தமிழ்நாடு அரசு சூப்பர் ஏற்பாடு..!! ஆனால் ஒரு ட்விஸ்ட்..!!

வெங்காயம் மற்றும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.35-க்கு விற்பனையான நிலையில், கடந்த வாரத்தில் இருந்து ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கடந்த மாதம் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.80 வரையும், மற்ற இடங்களில் ரூ. 90 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் வெங்காயத்தின் விலையும் கணிசமாக உயர்ந்து ஒரு கிலோ ரூ.55 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் கரணமாக பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளி விற்பனையை தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கிறது. விலை சற்று உயர்ந்ததை அடுத்து பொதுமக்களின் நலன் கருதி பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளியை இறக்குமதி செய்து விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி மகாராஷ்டிரா நாசிக்கில் இருந்து கொண்டு வரப்பட்டு தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40-க்கும், தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், ஒருவருக்கு அதிகபட்சமாக 2 கிலோ மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : கள்ளக்காதலி குடும்பத்திற்கு பணத்தை வாரி கொடுத்த கள்ளக்காதலன்..!! கூலித்தொழிலாளி கொலை வழக்கில் பயங்கர ட்விஸ்ட்..!!

English Summary

Housewives are shocked as onion and tomato prices have gone up sharply.

Chella

Next Post

அலர்ட்... இந்த App உங்கள் மொபைலில் இருந்தால் மொத்த பணத்திற்கும் ஆப்பு..!! உடனே டெலிட் பண்ணிடுங்க..

Wed Oct 9 , 2024
Delete these dangerous apps from your phone immediately, a small mistake and you will have to suffer the consequences..

You May Like