தன்னுடைய நடத்தை மீது சந்தேகப்பட்ட தன்னுடைய ஆண் நம்பரை, கத்தியால், குத்தி, கொடூரமான முறையில், கொலை செய்த இளம் பெண்ணை, காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.
தற்போது திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களை விட, திருமணம் செய்யாமலே லிவ் இன் முறையில் வாழ்க்கை நடத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு, உளிமாவு பகுதியில் இருக்கக்கூடிய அக்ஷய் நகரில் வசித்து வந்தவர் ஜாவித் (28) இவர் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர், பெங்களூரு பகுதியில் செல்போன்கள் பழுது நீக்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அவருக்கும், ரேணுகா (34) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியிருக்கிறது.
ஆனால், ரேணுகாவிற்கு ஏற்கனவே திருமணமாகி ஆறு வயதில் குழந்தை ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரேணுகா தன்னுடைய ஆண் நண்பரோடு, அக்ஷய் நகரில் கடந்த மூன்று ஆண்டுகளாக, திருமணம் செய்யாமலே லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான், கடந்த ஐந்தாம் தேதி ரேணுகாவிற்கும், அவருடைய ஆண் நண்பருக்கும் ஏற்பட்ட தகராறு ரேணுகா அவருடைய ஆண் நண்பரை கத்தியால், குத்தி, கொலை செய்தார்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரேணுகாவை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து, ரேணுகா காவல் நிலையத்தில் வழங்கிய வாக்குமூலத்தில் தனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதாகவும், ஆனாலும், மூன்று வருடங்களுக்கு முன்னர் ஜாகித்தை காதலித்து வந்ததாகவும், அதன் காரணமாக, மூன்று பேரும், திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ரேணுகா எந்த வித வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இருந்தாலும் கூட, அவர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பப்களுக்கு தனியாக செல்லும் ஆண்களை குறி வைத்து, அவர்களோடு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதனால், ரேணுகாவிற்கு அளவுக்கு அதிகமான பணம் கிடைத்துள்ள விவகாரமும், காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இப்படி பல ஆண்களுடன் சென்று வந்ததன் காரணமாக, ஜாவித்திற்கு ரேணுகாவின் மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து, ஜாவித் ரேணுகா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ரேணுகா, ஜாகித்தை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்.