இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் பயணித்த கார் சாலையின் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் , டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலை தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானதில், கார் தீப்பிடித்து.
காரில் இருந்து ரிஷப் பந்த் உடனே வெளியேறியதால் காயத்துடன் தப்பினார். விபத்து குறித்த தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ரிஷப் பந்தை மீட்டு டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ரிஷப் பந்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், தலையில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு கட்டு போடப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், ரிஷப் பந்த் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.