fbpx

கொரோனா பாதித்த அரசு ஊழியருக்கு எத்தனை நாட்கள் விடுப்பு..? வெளியான முக்கிய அறிவிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியருக்கு எத்தனை நாட்கள் விடுப்பு என்பது குறித்து மனிதவள மேலாண்மைத் துறை புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொற்று பரவலைக் குறைக்கும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், முகக்கவசம் அணியவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பாதித்த அரசு ஊழியருக்கு எத்தனை நாட்கள் விடுப்பு..? வெளியான முக்கிய அறிவிப்பு

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான விடுப்பு குறித்து மனிதவள மேலாண்மைத் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தலில் இருந்தாலும், சிகிச்சையில் இருந்தாலும் அத்தனை நாட்களும் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும். மருத்துவரின் சான்றிதழ் அடிப்படையில் தனிமைப்படுத்தலில் இருந்த நாட்கள், சிகிச்சையில் இருந்த நாட்களுக்கு விடுப்பு வழங்கப்படும். கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்பவர்கள், அதற்கான அறிவிப்பை சமர்ப்பித்தால், அவர்களுக்கும் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஹேக்கர் குழுக்களின் அராஜகம்...இந்தியாவில் உள்ள 2 ஆயிரம் வலைதளங்களை ஹேக்கிங் செய்துள்ளனர்...!

Sun Jul 10 , 2022
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில், கடந்த மே மாதம் 27 ஆம் தேதி ஒருவர் பேசியதற்கு எதிர் கருத்து கூறிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபர் சர்மாவின் கருத்துக்கு, இந்தியா மீது இணையதள தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வலைதளங்களை, இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து செயல்படும் ஹேக்கர் குழுக்கள் ஹேக்கிங் செய்துள்ளன. இதனை குஜராத் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். […]

You May Like