இந்திய குடிமக்கள் இப்போது தங்கள் வங்கி இருப்பை (Bank Balance) சரிபார்க்க ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கிய 12 இலக்க எண் தான் ஆதார் எண் ஆகும், மேலும் இது கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் படங்கள் போன்ற உங்கள் பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய குடிமக்கள் தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தங்கள் வங்கிக் கணக்குகளின் இருப்பை, கிளைக்குச் செல்லும் சிரமமின்றி ஆன்லைனில் சரிபார்க்கலாம்.
தங்கள் ஆதார் எண்களைப் பயன்படுத்துவதன் மூலம், குடிமக்கள் இப்போது தங்கள் வங்கியின் இணையதளத்தில் உள்நுழையாமல் தங்கள் வங்கிக் கணக்குகளின் இருப்பை சரிபார்க்கலாம்.
உங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க ஆதார் அட்டையைப் பயன்படுத்துவதற்கான படிப்படியான வழிமுறை :
- உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிலிருந்து 9999*1# என்பதை டயல் செய்யுங்கள்.
- உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்
- பின்னர் அதை சரிபார்க்க மீண்டும் ஒருமுறை உள்ளிடவும். வங்கி இருப்புடன் கூடிய ஃபிளாஷ் அறிவிப்பு உங்கள் திரையில் தோன்றும்.
- உங்கள் கணக்கு இருப்பு குறித்த தகவலை எஸ்.எம்.எஸ் மூலம் UIDAI அனுப்பும் .
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மற்ற தகவல்களைப் புதுப்பித்தல், உங்கள் தொலைபேசி எண்ணை ஆதாருடன் இணைப்பது போன்ற பல சேவைகளை வீட்டு வாசலில் சேவைகளை வழங்கத் தயாராகி வருகிறது. இதன் விளைவாக, இவற்றைப் பயன்படுத்த நீங்கள் ஆதார் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது..