பொதுவாக குழந்தை பிறப்பிற்கு பின்பு பல தாய்மார்களும் முதுகு வலியால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக சிசேரியன் செய்து கொண்ட தாய்மார்களுக்கு அதிகமாகவே முதுகு வலி ஏற்படும். இதற்கு காரணமாக சிசேரியன் செய்வதற்கு முன்பு முதுகில் போடப்படும் ஊசி தான் காரணம் என்று கூறி வருகின்றனர். இதை எப்படி சரி செய்யலாம் என்பதையும் முதுகு வலிக்கான காரணத்தையும் அறியலாம் வாங்க?
கர்ப்ப காலத்தில் போதுமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்டு வந்தாலும் குழந்தை பேரு சமயத்தில் அதிகமான ரத்தப்போக்கு ஏற்படுவதால் நம் உடலில் உள்ள பல சத்துக்களும் உறிஞ்சப்படுகின்றன. இதனால் பிரசவத்திற்கு பின்பு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக சிசேரியன் செய்து கொண்ட பெண்களுக்கு முதுகில் மயக்க ஊசி செலுத்தப்படும். இந்த ஊசி பிரசவத்திற்கு பின்பு முதுகெலும்பு மற்றும் தசை பகுதிகளில் இறுக்கத்தை ஏற்படுத்தி வலியை உண்டாக்குகிறது. பிரசவத்திற்கு பின்பு ஏற்படும் தலைவலி கழுத்து வலி மற்றும் முதுகு வலி போன்றவைகளுக்கு இந்த ஊசியும் ஒரு காரணமாகும்.
பிரசவத்திற்கு பின் ஏற்படும் முதுகு வலியை எப்படி சரி செய்யலாம்
கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணிற்கும் எந்த அளவிற்கு கவனிப்பு தேவைப்படுகிறதோ, அதே அளவிற்கு குழந்தை பெற்று கொண்டதற்கு பின்பும் தேவைப்படும். குழந்தை பிறந்தவுடன் தாயை கவனிக்காமல் இருப்பது மன அளவிலும், உடல் அளவிலும் தாய்க்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
தேவையான அளவு ஊட்டச்சத்தான உணவுகளை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். பால் கொடுக்கும் தாய்மார்கள் மருத்துவர் அளிக்கும், இரும்புச்சத்து, வைட்டமின் போன்ற மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். எலும்பை பலப்படுத்துவதற்கு கால்சியம் முக்கிய காரணமாகும். எனவே கால்சியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உண்டு வந்தால் முதுகு வலி குணமாகும். மேலும் சூடான நீரில் குளிப்பது, ஒரு சில யோகா முறைகளை செய்வது, குழந்தைகளுக்கு பாலூட்டும் போது நேரான பொசிஷனில் உட்கார்ந்து கொடுப்பது, உயரமான தலைகாணி இல்லாமல் படுப்பது போன்ற வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் முதுகு வலி இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.