fbpx

கோடையில் செல்லப்பிராணிகளை பாதுகாப்பது எப்படி..? இதை மட்டும் செய்து பாருங்க..!! குதூகலமா இருக்கும்..!!

கோடை காலத்தில் வெப்பத்தை சமாளிக்க நாம் குளிர்ச்சியான உணவு வகைகள், ஆடைகள் என நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம். ஆனால், செல்லப்பிராணிகள் அதுவும் குறிப்பாக நாய்கள் கோடையில் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. அதனால் கோடையில் நாய்களுக்கு விதைகள் நீக்கிய தர்ப்பூசணி, வெள்ளரிப் பிஞ்சுகள், செலரி ஆகியவற்றை உண்ணத் தரலாம். அதேபோல் நாய்கள் மொட்டை வெயிலில் விடாமல் வெப்பம் தாக்கம் குறைவாக இருக்கும் இடங்களுக்கு மாற்றலாம்.

கோடையில் நாய்களை எப்படி பராமரிப்பது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நீர்ச்சத்து குறைபாடு (Dehydration): கோடையில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க நாய்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். அதனால் நாய்கள் சோம்பல், உலர்ந்த ஈறுப் பிரச்சனை, சோர்வான கண்கள் போன்ற இடையூறுகளுக்கு ஆளாகலாம். அதனால் உங்கள் நாய்களுக்கு நிறைய நன்னீர் கிடைக்கச் செய்யுங்கள். அதேபோல் வெப்பம் அதிகம் நிலவும் பகுதிகளில் நடக்க வைக்காதீர்கள்.

உன்னி (Fleas and Ticks): வெப்பமான சூழலில் தான் உன்னி, பூச்சிகள் வளரும். அதனால் கோடை காலங்களில் நாய்களுக்கு உன்னி ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். இதனால் உன்னி தடுப்பு மருந்துகள் பயன்படுத்தலாம். உன்னி பரவும் பகுதிகளில் உங்கள் நாய்களை நடைபயிற்சி அழைத்துச் செல்வதைத் தவிர்க்கலாம்.

அலர்ஜி (Allergies): கோடை வந்துவிட்டால் நாய்களுக்கு விதவிதமான அலர்ஜிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மகரந்த துகள்கள், புல், பூச்சிக்கடி என அலர்ஜிக்கள் ஏற்படலாம். அதுதவிர அரிப்பு, தோல் சிவந்து போதல் ஆகிய பிரச்சனைகளும் ஏற்படலாம். ஒவ்வொரு நாய்க்கும் சிகிச்சை வேறுபடும் என்பதால் அலர்ஜி ஏற்பட்டால் மருத்துவரை நாடி உரிய சிகிச்சை கொடுக்கவும்.

சன் பர்ன் (Sunburn): ரோமம் அதிகமாக உள்ள நாய்கள் என்றால் கோடை காலத்தில் அவற்றின் நிறம் மங்கும், காது, மூக்கில் வறட்சி ஏற்படும். அதனால் வெயில் காலத்தில் செல்லப் பிராணிகளுக்கு உகந்த சன் ஸ்க்ரீன் லோஷன்களை பயன்படுத்தலாம்.

காதில் தொற்றுநோய் (Ear infections): நீர்நிலைகளில் நீந்துவது என்பது நாய்களுக்கு காதில் தொற்றுநோய் உண்டாக்கும். அதனால் நாய்களை நீச்சலுக்கு அழைத்துச் சென்றால் முடிந்தவுடன் அவற்றின் காதை சுத்தப்படுத்துங்கள்.

ஹீட் ஸ்ட்ரோக் (Heatstroke): ஹீட் ஸ்ட்ரோக் என்பது நாய்களுக்கு உயிர் பறிக்கும் நோயாக மாறலாம். ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் நாய்கள் மிக மோசமாக மூச்சுத்திணறலில் சிக்கும். வாயில் நுரை ஊறுதல், மயக்கம், வாந்தி போன்ற அறிகுறிகளும் ஏற்படும். நாய்களை வெப்பமான நேரங்களில் காரில் அழைத்துச் செல்ல வேண்டாம். நாய்களை நிழலில் இருக்குமாறு செய்யுங்கள். நிறைய தண்ணீர் கொடுங்கள்.

Chella

Next Post

‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது.. புதிய வரலாறு படைத்த RRR பாடல்...

Mon Mar 13 , 2023
ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது.. இதில் சிறந்த பாடலுக்கான விருது RRR படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கிடைத்துள்ளது.. இப்படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி நமஸ்தே என்று கூறி ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டார்.. இந்திய தயாரிப்பில் உருவான ஒரு படத்திற்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைப்பது இதுவே முதன்முறையாகும்.. 2009 ஆம் ஆண்டு இதே பிரிவில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் […]

You May Like