சென்னை அருகே, வீட்டில் பாலியல் தொழிலை செய்து வந்த, கணவன், மனைவி உள்ளிட்டோரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வடசென்னை ராயபுரம் பகுதியில் அமைந்து இருக்கின்ற, ராஜவேல் தெருவின் குடியிருப்புகள் நிறைந்துள்ள ஒரு பகுதியில், அமைந்திருக்கின்ற ஒரு வீட்டில், பாலியல் தொழில் நடந்து வருவதாக, ராயபுரம் காவல் துறையினருக்கு ரகசியமாக தகவல் வந்தது. அதன்படி, அந்த பகுதிக்கு சென்று மகளிர் காவல் துறையினர் உதவியோடு, சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில், குறிப்பிட்ட அந்த வீட்டில், பாலியல் தொழில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை காவல்துறையினர் உறுதி செய்ததால், வீட்டில் தனிமையில் இருந்த நபர்கள் மற்றும் வீட்டிலேயே பாலியல் தொழில் நடத்தி வந்த கணவன், மனைவி உள்ளிட்ட இருவரையும், ராயபுரம் காவல் துறையினர் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர், கணவன்(45), மனைவி சித்ரா(37) என்ற விவரம் தெரியவந்துள்ளது ஆகவே கணவன், மனைவி இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர் காவல் துறையினர்.