fbpx

நடுரோட்டில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்..!! தீவைத்து எரித்துக் கொண்ட பரபர சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் அய்யம்மாள் (45) – அக்பர் இப்ராஹிம் தம்பதியர். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். பாளையங்கோட்டை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த அய்யம்மாள், அண்ணா நகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை பணி முடிந்து இவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்த அவரது கணவர் அக்பர் இப்ராஹிம், மனைவி அய்யாம்மாளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அக்பர், தான் மறைத்து வைத்திருந்த கத்தி போன்ற ஆயுதத்தைக் கொண்டு அய்யம்மாளை குத்திக் கொலை செய்துவிட்டு, பின் அவர் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியுள்ளார்.

அரசு மருத்துவமனை அருகிலேயே நடந்த இந்த சம்பவத்தை அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை தொடங்கினர். எரிந்த நிலையில், காயங்களுடன் கிடந்த அய்யம்மாள் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கடந்த பல மாதங்களாக குடும்பத் தகராறு இருந்ததும், அதில்தான் கணவர் அக்பர் இப்ராஹிம் இப்படியொரு கொடூரத்தை செய்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் மனைவியை கொலை செய்த அக்பர் இப்ராஹிம், சொந்த ஊரான கோவில்பட்டிக்கு சென்று அங்குள்ள கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். கணவன்-மனைவிக்கு இடையேயான தகராறு காரணமாகத்தான், அய்யம்மாள் கோவில்பட்டியில் இருந்து மாற்றல் வாங்கி திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நடுரோட்டில் அரசு ஊழியருக்கு நடந்த இந்த கொடூரச்சம்பவம், அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

சித்தப்பாவின் சித்து விளையாட்டு..!! சிறுமிக்கு பிறந்தது ஆண் குழந்தை..!! கோவையில் பரபர சம்பவம்..!!

Fri May 5 , 2023
கோவை மாவட்டம் பட்டணம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது தந்தையுடன் வசித்து வந்திருக்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டில் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதற்கிடையே, சிறுமியின் சித்தப்பா தாமோதர சாமி, மகளை தான் பார்த்துக் கொள்வதாக உத்தரவாதம் அளித்திருக்கிறார். சித்தப்பா உறவு முறை என்பதால், சிறுமியுடன் தங்க உறவினர்கள் அனுமதித்திருக்கிறார்கள். கடந்த 2019ஆம் ஆண்டில் […]

You May Like