fbpx

’கருப்பா இருந்தாலும் சிறுமியின் மீது கணவருக்கு ஆசை’..!! உடல் முழுவதும் அயர்ன் பாக்ஸ், சிகரெட் சூடு..!! அதிர்ச்சி வாக்குமூலம்..!!

சென்னை அமைந்தகரை மேத்தா நகர், சதாசிவ மேத்தா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஸ் (35). இவருக்கு நாசியா ​​என்ற மனைவியும், 6 வயதில் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், தஞ்சையை சேர்ந்த 16 வயது சிறுமி நவாஸ் வீட்டில் தங்கியிருந்தபடியே, கடந்த ஓராண்டுக்கும் மேலாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

தீபாவளியன்று நவாஸ் வீட்டில் வேலைப் பார்த்து வந்த சிறுமி குளியலறையில் குளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த நவாசும், அவரது மனைவி நாசியாவும் குளியலறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சிறுமி சடலமாக கிடந்ததாகவும், இதனால் பயத்தில் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றதாக கூறியிருந்தனர்.

பின்னர் நவம்பர் 1ஆம் தேதி நவாஸ் தனது வழக்கறிஞர் மூலம் சிறுமியின் மரணம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குளியலறையில் இறந்து கிடந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலில் பல இடங்களில் சிகரெட்டால் சுடப்பட்ட காயங்கள் மற்றும் தீக்காயங்கள் இருந்துள்ளது.

இதையடுத்து, சந்தேகமடைந்த போலீசார் கணவன், மனைவி இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவன் – மனைவி இருவரும் சிறுமியை அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது. தீபாவளி அன்று காலை நவாஸ், நாசியா மற்றும் அவர்களது நண்பர் லோகேஷ் ஆகியோர் சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளனர். சிறுமியின் மார்பில் அயர்ன் பாக்ஸால் சூடு வைத்துள்ளனர்.

இதில், சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மூவரும் சேர்ந்து சிறுமியை குளியலறைக்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டு, ஊதுபத்தியை கொளுத்தி வைத்து விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்று தலைமறைவாகினர். விசாரணையில் லோகேஷ் மூலம் வக்கீலை ஏற்பாடு செய்து போலீசாருக்கு தகவல் கொடுத்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி கொலை குறித்து வீட்டின் உரிமையாளர் நாசியா போலீசாரிடம் கூறுகையில், கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்த சிறுமியின் மீது, தனது கணவரின் பார்வை திரும்பியதாக சந்தேகப்பட்டு கொடூரமாக சித்தரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் அமைந்தகரை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நவம்பர் 16ஆம் தேதி வரை 6 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அனைவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Read More : கொலஸ்ட்ரால் முதல் சர்க்கரை நோய் வரை..!! இந்த ஒரு ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..?

English Summary

She confessed that she brutally tortured the girl, who was black but beautiful, suspecting that her husband had returned his sight.

Chella

Next Post

ரயில்வே காப்பீடு பற்றி உங்களுக்கு தெரியுமா..? வெறும் 35 பைசா செலுத்தினால் ரூ.10 லட்சம் கிடைக்கும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Mon Nov 4 , 2024
If the passenger has taken travel insurance while booking the ticket with IRCTC, the benefit can also be compensated.

You May Like