fbpx

’எனக்கு நீ தான் வீடு கட்டித் தரணும்’..!! பெண் ஆர்கிடெக்சருக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்..!! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..!!

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி. காலனி திரு.வி.க நகரை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். 68 வயதாகும் பிசியோதெரபிஸ்ட்டான இவருக்கு, சோசியல் மீடியா மூலம் 23 வயது இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். அவர் கட்டிடக் கலை நிபுணர் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேரில் சந்தித்து பேசியிருக்கின்றனர்.

அப்போது, ஆனந்த கிருஷ்ணன் தனது வீட்டை நேரில் பார்வையிட்டு புதுப்பித்து கட்டி தர வேண்டும் என்று அந்த இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணும் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் ஆனந்த கிருஷ்ணன்.

அந்த இளம்பெண்ணுக்கு டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்ததும் அவர் மயங்கிவிட்டார். இதையடுத்து, ஆனந்த கிருஷ்ணன் அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ஆனந்த கிருஷ்ணனிடம் கேட்டபோது வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். ஆனாலும், தைரியத்துடன் அந்த பெண், கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால், காவல்துறையினர் முறையாக விசாரணை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், இளம் பெண்ணின் புகார் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாநகர காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. விசாரணையில், அந்த இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. உடனே, தேனி மாவட்டம் குமுளி பகுதியில் தலைமறைவாக இருந்த ஆனந்த கிருஷ்ணனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : ’குடிச்சிட்டு யாரும் மாநாட்டுக்கு வராதீங்க’..!! தவெக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பறந்த உத்தரவு..!!

English Summary

The young woman was given anesthetic in tea. After drinking it, he fainted. Subsequently, Ananda Krishnan raped the young woman.

Chella

Next Post

15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்...!

Thu Sep 26 , 2024
Supreme Court granted bail to Senthil Balaji

You May Like