நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா, செப்டம்பர் 19ஆம் தேதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 12ஆம் வகுப்பு படிக்கும் அவர், கடந்த சில நாட்களாக கடுமையான மன உளைச்சளால் பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகள் மீரா இழப்பால் மிகவும் வருத்தத்தில் விஜய் ஆண்டனி இருந்து வருவதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில் மகள் மீரா மறைவு குறித்து விஜய் ஆண்டனி உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு சென்று இருக்கிறாள்.
என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துள்ளேன். அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள். உங்கள் விஜய் ஆண்டனி” எனத் தெரிவித்துள்ளார்.