fbpx

’என் குழந்தைகள் மீது சத்தியம் செய்கிறேன்’..!! பாலியல் புகார் குறித்து பரபரப்பு பேட்டி கொடுத்த ட்ரம்ப்..!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 1990-களில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் டிரஸ்ஸிங் அறையில் அமெரிக்க எழுத்தாளர் ஈ ஜீன் கரோல் என்பவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், நீதிமன்றம் டொனால்ட் ட்ரம்ப் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண் எழுத்தாளர் ஈ ஜீன் கரோல்-க்கு ரூ.41 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை வரவேற்ற எழுத்தாளர் ஈ ஜீன் கரோல் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “இன்று, உலகம் இறுதியாக உண்மையை அறிந்திருக்கிறது. இந்த வெற்றி எனக்கு மட்டுமல்ல, அவரால் பாதிக்கப்பட்டு, நம்பப்படாமல் அவதிப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து ட்ரம்ப்-ன் செய்தித் தொடர்பாளர், “ட்ரம்ப் மீதான இந்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்வோம். அதுவரை நஷ்ட ஈடு வழங்க மாட்டோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப் தனியார் செய்தி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்திருக்கிறார். அதில், “என் மீது குற்றம்சாட்டிய பெண், யாரென்றே எனக்குத் தெரியாது. நான் அவரை சந்தித்ததே இல்லை. என் குழந்தைகள் மீது சத்தியம் செய்கிறேன். நான் ஒருபோதும் அந்தப் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்யவில்லை. என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஒரு போலிக் கதை. உருவாக்கப்பட்ட கதை. என் வழக்கை விசாரித்த நீதிபதி எங்கள் தரப்பு கருத்தைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் அனுமதித்தார்” என குற்றம்சாட்டியுள்ளார்.

Chella

Next Post

வங்கக் கடலில் உருவானது மோக்கா புயல்….! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்…..!

Thu May 11 , 2023
வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியது. இந்த புயல் மியான்மர் நோக்கி நகரும் என்பதால் சென்னை உட்பட வட தமிழகத்தில் வெயில் கூடுதலாக இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில், தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, தென்கிழக்கு […]

You May Like