மணமகனின் ஆண்டு வருமானம் ரூ.1 கோடி இருக்க வேண்டும் என்று பெண் ஒருவர் கோரிக்கை வைத்துள்ள உரையாடல் வைரலாகி வருகிறது.
தற்போதைய காலத்தில் திருமணம் செய்வதற்கு மணமகன் மற்றும் மணமகளை தேடுவதற்கு சிரமமாக உள்ளது. அதற்கு பல இணையதளங்களும் வந்துவிட்டன. இந்தநிலையில் தான், 37 வயதுடைய பெண் ஒருவர் தனக்கு வரப்போகும் கணவர் குறித்த எதிர்பார்ப்புகள் பற்றி வாட்ஸ்அப்பில் பேசியுள்ளார். அந்த உரையாடல் தான் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த உரையாடலில் அவர், “எனது குடும்பத்தின் வருமானம் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் ஆகும். எனக்கு வரப்போகும் கணவருக்கு மும்பையில் சொந்தமாக வீடு இருக்க வேண்டும். அவர், அழகாகவும், எம்.பி.பி.எஸ். அல்லது CA படித்தவராகவோ இருக்க வேண்டும். அவர், இத்தாலி அல்லது ஐரோப்பாவில் வாழ்வதற்கு விரும்பும் நபராக இருக்க வேண்டும். அவரது ஆண்டு வருமானம் ரூ.1 கோடியாக இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார். இந்த பதிவை தற்போது பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Read More : குளுகுளு நியூஸ்..!! நாளை முதல் ஆரம்பம்..!! மக்கள் மகிழ்ச்சி..!! வானிலை ஆய்வு மையம் சொன்ன நல்ல செய்தி..!!