இந்தியில் மிகப் பெரிய ஹிட் அடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் அறிமுகப்படுத்தியது விஜய் டிவி. இந்தியில் ஒருமுறை கூட பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்களுக்கு 100 நாட்கள் ஒரே வீட்டில் போட்டியாளர்கள் என்ற கான்செப்ட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கடந்த 2017ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் முதல் சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். தமிழில் பிக்பாஸ் முதல் அறிமுகம் என்பதால் மிகப் பெரிய ஹிட் அடித்தது.
இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது கூடுதல் பலமானது. அவரின் கண்டிப்பு கலந்த மரியாதை, போட்டியாளர்களை பதில் பேச விடாமலே தவறை புரிய வைப்பது, தமிழிலே பேசி நிகழ்ச்சியை கொண்டு போவது என வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே கிடைக்கும் கமலின் தரிசனம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய பலம் சேர்த்தது.
இந்நிலையில் தான், இந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சினிமாத்துறையில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்கள் அதிகமாக இருப்பதால், பிக்பாஸ் தொடரில் இருந்து சிறிய ஓய்வு எடுப்பதாக அவர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நிறைய கற்றுக் கொண்டதாகவும், இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்களுக்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More : ”இம்மாத இறுதிக்குள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை”..!! அமைச்சர் கீதா ஜீவன் சொன்ன குட் நியூஸ்..!!