fbpx

இனி பள்ளி மாணவர்களை கீழே இறக்கிவிட்டால்..! பேருந்து நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை..!

பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பள்ளி மாணவர்கள் சீருடை அல்லது கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வைத்திருந்தால், அந்த மாணவர்களை நடத்துநர்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார். மேலும், நடப்பு ஆண்டு பேருந்து பயண அட்டை வழங்கும் வரை இது பொருந்தும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், பல வழித்தடத்தில் பயண அட்டை இல்லை என நடத்துநர்கள் பள்ளி மாணவர்களை இறக்கி விடுவதாக புகார்கள் வந்துள்ளது. எனவே, தற்போது பயண அட்டை வழங்குவதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், சென்னையில் அனைத்து வழித்தடத்திலும் பள்ளி சீருடை அல்லது பழைய பேருந்து அடையாள அட்டை இருந்தால் அனுமதிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இனி பள்ளி மாணவர்களை கீழே இறக்கிவிட்டால்..! பேருந்து நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை..!

அதேபோல் அரசு கலைக்கல்லூரி, இசைக்கல்லூரி, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை, கல்லூரி தொழிற்பயிற்சி நிலைய மாணவ / மாணவியரும் அடையாள அட்டை வைத்திருந்தால் பேருந்தில் இலவசம் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை மீறி செயல்படும் நடத்துநர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Chella

Next Post

நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு.. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...

Fri Jul 15 , 2022
நடிகர் விஜய் கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து BMW X5 காரை ரூ.63 லட்சத்திற்கு இறக்குமதி செய்திருந்தார்.. இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது.. இதை எதிர்த்து நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கில் நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்தது.. இதையடுத்து ரூ.7,98,075 நுழைவு வரி விஜய் தரப்பில் செலுத்தப்பட்டது.. ஆனால் […]

You May Like