fbpx

தூள்…! இவர்கள் எல்லாம் வாங்கினால் 100 சதவீதம் முத்திரைத்தாள் & பதிவுக் கட்டணத்தில் இருந்து விலக்கு…!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு, 50 சதவீதம் மானியத்துடன், கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் (6 சதவீதம்) கடனாக பெற்று வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள், விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5.00 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானிய தொகை போக எஞ்சிய கிரையத் தொகையினை தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டுக்கழக நிதியிலிருந்து பயனாளிகளுக்கு 6 சதவீதம் வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆதிதிராவிட வகுப்பினர் தாட்கோ இணையதளமான www.application.tahdco.com என்ற முகவரியிலும், பழங்குடியின வகுப்பினர் www.fast.tahdco.com என்ற முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.

English Summary

If they buy everything, 100 percent of the stamp duty & registration fee will be paid.

Vignesh

Next Post

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக விரட்டி விரட்டி கைது...! வலுக்கும் எதிர்ப்பு குரல்...!

Tue Jan 14 , 2025
அமைச்சர் பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதற்காக பொதுமக்களை கைது செய்து பழிவாங்குவதா..? ஆதங்கத்தை வெளிப்படுத்திய பொதுமக்கள் மீது அடக்குமுறையை கையாண்டிருக்கும் திமுக அரசின் அதிகாரப் போக்கிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் தனது அறிக்கையில்; வனத்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதாகக் கூறி விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிலரை வீடுபுகுந்து […]

You May Like