தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்..
தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி, தமிழக அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது… காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நெல்லையிலும் இன்று பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் இந்த போராட்டத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ ஆந்திரா போல தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நாங்களும் கேட்போம்.. 117 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு 2 மாநிலங்கள் உருவாக்கப்பட்டால் இரண்டிலும் பாஜக ஆட்சிக்கு வர முடியும்.. நிர்வாக வசதிக்காக அவ்வாறு பிரிக்கலாம்..
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது என்று நினைக்க வேண்டாம். இப்போது பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம். இரண்டாக பிரிக்க கோரி இனி போராட்டம் நடைபெறலாம்..” என்று தெரிவித்தார்..