எலி தொல்லை காரணமாக மக்கள் ஒவ்வொரு வீட்டிலும் சிரமப்படுகின்றனர். வீட்டில் எலி இல்லாதவர்கள் கதவைத் திறந்தால் எலி வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்த தேவையற்ற எலிகள், உங்கள் வீட்டில் அழிவை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், பெட்டிகள், பிளாஸ்டிக் பொருட்கள், உடைகள், உணவுப் பொருட்களை உண்பது என அனைத்தையும் கடித்து சேதப்படுத்திவிடுகிறது.
எலிகளைக் கொல்ல பல்வேறு வகையான மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால், பெரும்பாலும் எலிகள் அந்த மருந்துகளை சாப்பிட்டு வீட்டின் ஏதோ ஒரு மூலையில் இறந்துவிடும். நான்கைந்து நாட்களுக்குப் பிறகு வீட்டில் துர்நாற்றம் வீடும். எலிகளைக் கொல்ல விரும்பாதவர்கள் அதிகம். எனவே, அதை விரட்ட வேறு வழிகள் உள்ளது.
எலிகளை விரட்டும் வழிமுறைகள்…
* முதல் தீர்வு- உங்கள் வீட்டின் வாசலில் இருந்து எலிகள் ஓடிவிட வேண்டுமெனில், இதை நீங்கள் பின்பற்றலாம்.
* இதற்கு நீங்கள் 1-2 ஸ்பூன் கோதுமை அல்லது அரிசி, சிவப்பு மிளகாய், சிறிய துண்டு சோப்பு மற்றும் டெட்டால் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
* இப்போது ஒரு சிறிய கைக்குட்டையை எடுத்து டெட்டாலில் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
* டெட்டாலில் ஊறவைத்த பிறகு, அதில் 1-2 ஸ்பூன் கோதுமை, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் ஒரு சிறிய துண்டு சோப்பை சேர்த்துக் கொள்ளுங்கள்.
* இப்போது இந்த கைக்குட்டையை ரப்பர் அல்லது கயிற்றால் கட்டி, அத்தகைய 2 மூட்டைகளை உருவாக்கி, கதவின் வெளிப்புற விளிம்புகளில் வைத்து விடுங்கள்.
* இப்படிச் செய்வதால் எலிகள் உங்கள் வீட்டு வாசலுக்கு வராது, நீங்கள் எப்போது கதவைத் திறந்தாலும் அவை உங்கள் வீட்டிற்குள் வராது.
Read More : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்..? ரூ.35,000 சம்பளத்தில் வேலை ரெடி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!