ஐஐடி மெட்ராஸ், கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பற்றிய ஆன்லைன் படிப்பைத் தொடங்கியுள்ளது.தனித்துவமான இப்பாடத் திட்டத்தின் வாயிலாக இரு முக்கிய பகுதிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
நவீன மற்றும் நீடித்த கட்டுமானத் தொழில்நுட்பங்களில் ஈடுபடுவோருக்கு பயிற்றுவிப்பது தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு அவசியமாகிறது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20-ம் தேதி கடைசி நாளாகும்.
வடிவமைப்பு மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் வல்லுநர்கள் மட்டுமின்றி, பொறியியல் கல்லூரிகளின் ஆசிரியர்கள், கட்டுமானத் தொழிலில் பணியாற்ற விரும்பும் மாணவர்கள் ஆகியோரையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பாடத்திட்டத்தில், அதிநவீன கட்டுமான மேலாண்மையின் நுட்பங்களும் நடைமுறைகளும் இடம்பெற்றுள்ளன.