இளையராஜாவையும், மணிரத்தினத்தையும் விமர்சிப்பதற்கு எனக்கு தகுதி மற்றும் உரிமை இருக்கிறது என சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார் இயக்குனர் மிஸ்கின்.
நரேன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இதையடுத்து அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி கண்ட மிஷ்கின், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.
சமீபத்தில் தி ப்ரூப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கோயிலுக்கு போக வேண்டாம் தியேட்டரில் போய் படம் பாருங்கள் என இயக்குனர் மிஷ்கின் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் கண்டனத்தை பெற்றது. இந்த நிலையில்,
இயக்குனர் விக்ரமன் அவர்களின் மகன் விஜய் கனிஷ்கா, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் ஹிட் லிஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஸ்கின், கடந்த மேடையில் நான் தியேட்டருக்கு போங்க. கோயிலுக்கு போகாதீங்க என சொன்னதை சர்ச்சையாக்கி விட்டார்கள். நான் கோயில் என சொன்னது சர்ச், மசூதி எல்லாம் சேர்ந்தது. நான் பிறப்பால் இந்து தான். ஆனால் இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்து, கிறிஸ்தவ பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டுள்ளேன் என்றார்.
கோயிலுக்கு காலையிலேயே செல்கிறீர்கள். அதேபோல் இன்றைக்கு தியேட்டர் வெறிச்சோடி கிடப்பது தான் நிஜம். ஏன் கோயிலை விட தியேட்டர் முக்கியம் என சொல்கிறேன் என்றால் இரண்டு பேராக உட்கார்ந்து டிவி பார்த்து விடலாம். நிறைய பேர் உட்கார்ந்தால் அது ஒரு கொண்டாட்டம். அப்படி ஒரு கொண்டாட்டம் நடக்கும் இடம் தான் தியேட்டர்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நான் தனி அறையில் இருக்கும்போது தான் இளையராஜாவையும், மணிரத்தினத்தையும் விமர்சனம் செய்கிற தகுதி எனக்கு இருக்கிறது, உரிமை எனக்கு இருக்கிறது என்று மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.